தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்க்க ஒரு மென்பொருள்

இணைய தளம் ஒன்றைப் பார்க்கையில் அதில் உங்கள் கவனத்தை ஈர்க்கும் தகவலை ஒட்டி வீடியோ ஒன்றைப் பார்க்குமாறு செய்தி தரப்பட்டுள்ளது. உடனே தொடர்புடைய லிங்க்கில் கிளிக் செய்கிறீர்கள். பொறுமையைச் சோதிக்கும் வகையில் லோடிங் மெசேஜ் சுழன்று கொண்டே இருக்கிறது. இறுதியில் தளமும் திறக்கிறது. என்ன ஏமாற்றம்! அதில் இந்த வீடியோ உங்கள் நாட்டில் கிடைக்காது என்ற செய்தி வருகிறது. உங்கள் பொறுமையைச் சோதித்துவிட்டு இது போன்ற தகவல் வந்தால் எப்படி இருக்கும்?

இதனை எல்லாம் உடைக்க ஏதேனும் புரோகிராம் கிடையாதா? என்று ஓர் ஆதங்கம் வருமில்லையா? அந்த ஆதங்கத்தினைத் தீர்ப்பதற்காகவே Hotspot Shield என்று ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.

இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து விட்டால் இது போன்ற தடை செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். முதலில் இந்த புரோகிராமை இறக்கி இன்ஸ்டால் செய்திடவும்.

இதன் பின் Start, All Programs, Hotspot Shield என்று சென்று Hotspot Shield Launch என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவில் இந்த புரோகிராம் திறக்கப் படும்.இனி நீங்கள் பிரவுசர் செய்தால் தடை செய்யப்பட்ட வீடியோக்கள் கிடைக்கும். இந்த வசதி தேவை இல்லை என்றால் Disconnect என்ற பட்டனில் கிளிக் செய்துவிடலாம்.

தரவிறக்கம் செய்ய :http://anchorfree.com/downloads/hotspotshield/

(Recover Files) : அழித்த பைல்களை மீட்கலாம்


நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம்.

இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே அவற்றை மீண்டும் திரும்பப் பெற முடியாத வகையில் பல செயல்களில் ஈடுபட்டு பின் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files.

*ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள்

*நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள்

*கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள்

*டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள்

*விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டுகட்டாயமாக நீக்கிய பைல்கள்

என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தரவிறக்கம் செய்ய : http://www.undeleteunerase.com/download.html

மிகச் சிறந்த வீடியோ downloader

http://tamilhackx.blogspot.com/2009/02/dowload.html

நம்மில் பலர் இணையத்தளங்களில் பார்க்கும் வீடியோவை download பண்ணுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.  பார்க்கும் வீடியோ இன் link ஐ copy செய்து keepvid.com பேன்ற தளங்களில் paste செய்வதன் மூலமோ அல்லது வேறு மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலமோ சிறிய வீடியோவை download பண்ணுவதற்கு கூடிய நேரத்தினை விணாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள்தான் Vdownloader. இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தளங்களில் இருந்து வீடியோவை download பண்ண முடியும்.


 

  • Youtube 
  • Google Video
  • DailyMotion
  • MySpace
  • Veoh
  • GoFish
  • Netlog
  • Blip TV
  • MyVideo.de
  • Porkolt
  • Metacafe
  • Break.com
  • 123 Video
  • Bolt
  • Vreel (Beta)
  • Clevver
  • Tudou
  • VSocial
  • Lulu TV
  • Guba
  • HideBehind
  • Dale al Play
  • Yahoo! Video
  • Tu.tv Hispavista
  • Vimeo

 

அது மட்டுமல்லாது download பண்ணிய வீடியோவை நீங்கள் விரும்பிய format இல் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும் . இதில் நாம் பார்க்கும் வீடியோ இன் link இ copy செய்து paste செய்வதன் மூலமாகவோ அல்லது இதில் உள்ள browser இன் மூலமாகவோ அல்லது search என்ற பகுதியில் நாம் விரும்பிய தலைப்பை கொடுத்து search செய்வதன் முலமாகவோ வீடியோவை download செய்து கொள்ளலாம்.

தள முகவரி : http://www.vdownloader.es/index.html

மென்பொருள் கற்க உதவும் தளங்கள்

வரைப்படம் மென்பொருள்களான‌ போட்டாசாப், கோரல்டிரா, ஃப்ளாஷ், வடிவமைத்தலை சேர்ந்த பல மென்பொருள்களில் பாடங்களை ஆன்லைன்லில் கற்க உதவும் மற்றும் விளக்கங்கள்  உதாரணங்கள் என எல்லா வகையிலும் நிவர்த்தி செய்ய கீழுள்ள அனைத்து தளங்களும் உங்களுக்கு உதவும் அவைகள் :

GRAPHICS TUTORIAL SITES:

http://www.tutorialoutpost.com/
http://www.photoshoplab.com/
http://www.newtutorials.com/
http://www.grafx-design.com/

Home


http://www.web-source.net/

Home


http://www.pixel2life.com/
http://www.invano.com/